Entertainment
வடிவேலு நடிக்கும் நாய்சேகர் பட அப்டேட்
லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நாய்சேகர். பல கட்ட பஞ்சாயத்துக்கு பின் வடிவேலு ரெட்கார்டு எல்லாம் நீங்கிய பிறகு தற்போது நாய்சேகர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். சுராஜ் ஏற்கனவே வடிவேலு நடித்த முக்கிய படங்களின் காமெடியை எழுதியவர். சுராஜ் எழுதிய காமெடிக்கும் வடிவேலுவுக்கும் அப்படி ஒரு பொருத்தம் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வடிவேலுவும் சுராஜும் சந்தித்து பேசியுள்ளனர். அங்கு கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் ஷூட்டிங் தொடங்கி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
