Entertainment
வடிவேலுவின் படத்தில் பிரபுதேவா நடிக்கிறாரா?
வடிவேலு , பிரபுதேவா காம்பினேஷன்கள் எப்போதுமே ஸ்பெஷலான காம்பினேஷனாகவே இருக்கும். இவர்கள் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் சும்மா அள்ளும்.
அதிலும் மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, மனதை திருடிவிட்டாய், காதலன், லவ் பேர்ட்ஸ் எல்லாமே சூப்பரான படங்களாக இருக்கும்.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் முன் பிரபுதேவாவுடன் வடிவேலு வெளியிட்ட சிங் இன் த ரெய்ன் பாடல் வீடியோ வரவேற்பை பெற்றது.
விசயம் என்னவென்றால் பிரபுதேவா வடிவேலு படத்தில் பல வருடங்களுக்கு பின் பணியாற்றுகிறாராம்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளாராம்.
இது சம்மந்தமாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்ட்ய்ம் வைகைப்புயல் வடிவேலுவின் தாறு மாறு மூவ்ஸ்களை காண தயாராகுங்கள்” எனக் கூறி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. வடிவேலு பிரபுதேவா கூட்டணியில் உருவான பேட்டராப் உள்ளிட்ட பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
