மனவருத்தம் மறந்து வடிவேலுடன் மனோபாலா

22

பிரபல இயக்குனர் மனோபாலா. வடிவேலுவின் ஹிட் அடித்த பல காமெடிகளில் மனோபாலாவும் ஒரு பாத்திரமாக இருப்பார். பல படங்களில் இவர்களின் கூட்டணி ஹிட் அடித்தது. இருவரும் நல்ல நண்பர்களும் கூட.

இப்படி இருக்கையில் சில நாட்கள் முன் மனோபாலாவின் யூ டியூப் சேனலில் சிங்கமுத்துவிடம் பேட்டி எடுத்து சிங்கமுத்து வடிவேலுவை பற்றி தவறாக கூறியது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை.

இதனால் சிங்கமுத்து மீது மட்டுமின்றி பேட்டி எடுத்து அதை தன் சேனலில் ஒளிபரப்பிய மனோபாலா மீதும் பாய்ந்தார் வடிவேலு. இந்த சம்பவம் எல்லாம் நடந்து சில மாதங்கள் ஆகிறது.

இந்நிலையில் பழைய விசயத்தை எல்லாம் மறந்து மனோபாலாவுடன் வடிவேலு சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலுவுடன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/manobalam/status/1360393586177544193?s=20

பாருங்க:  ஜூகி ஜாவ்லாவின் தோடு- யாராவது எடுத்தால் கொடுத்துடுங்க