Entertainment
வடபழனி முருகன் கோவில் கும்பாபிசேக தேதி அறிவிப்பு
ஒவ்வொரு பெரு நகரத்திலும் ஒரு புகழ்பெற்ற முருகன் கோவில் இருக்கும் அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் மிகப்பெரும் நகரமான தலைநகர் சென்னையின் முக்கியமான முருகன் கோவிலாக விளங்குவது வடபழனி முருகன் கோவில்.
மிகவும் பிஸியான இந்த கோவில் மிக புகழ்பெற்றது. இங்கு அதிக அளவில் திருமணங்கள் நெரிசலுடன் நடக்கும் இதை போக்கும் விதத்தில் சிறிய திருமண கூடங்களை கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும் வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பின்னர் கும்பாபிசேகம் நடைபெறவில்லை. தற்போது கோவில் திருப்பணிகள் நடைபெற்று வரும் வேளையில் வரும் ஜனவரி மாதம் 23ம் தேதி கும்பாபிசேகம் நடக்க இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
