வடசென்னை 2 சினிமாவாக அல்ல…. வேறு வடிவில் வரும்! வெற்றிமாறன் நம்பிக்கை!

வடசென்னை 2 சினிமாவாக அல்ல…. வேறு வடிவில் வரும்! வெற்றிமாறன் நம்பிக்கை!

வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வெப் சீரிஸாக வெளிவரும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ திரைப்படம் 2018 ஆம் ஆண்டு  வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இருப்பினும் குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்துவதாகவும் அதனால் அதன் இரண்டா, பாகத்தை எடுக்கக் கூடாது எனவும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து உருவாக்கிய  ‘அசுரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து வெற்றிமாறன் இப்போது வாடிவாசல் எனும் படத்தை எடுக்கும் முனைப்பில் உள்ளார். அதில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வெற்றிமாறன் அளித்த நேர்காணலில் வடசென்னை 2 எப்போது உருவாகும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் வடசென்னை 2ஆம் பாகத்தை வெப் சீரிஸாக எடுக்கலாமா என்ற யோசனையில் இருப்பதாகக் கூறியுள்ளார். அந்த படத்தை மட்டும் 2 சீசன்களாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.