Entertainment
மீண்டும் களத்தில் குதித்த பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ்
கேரளாவின் புகழ்பெற்ற பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷ். இவர் சில நாட்களுக்கு முன் கேரளாவில் ஒரு வீட்டில் புகுந்த பாம்பை பிடிக்கிறேன் என தவறுதலாக பாம்பு கொத்தியதில் சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு போய்விட்டார்.
கேரளா மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களும் வா வா சுரேஷ் உடல் நிலை தேறி வர பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில் மிக ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்ட வா வா சுரேஷ் மீண்டும் நேற்று ராஜநாகத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
மீண்டும் களம் இறங்கிய கேரள snake மாஸ்டர் வாவா சுரேஷ்
ஊருக்குள் புகுந்த 12 அடி நீள ராஜநாகத்தை அசால்டாக பிடித்து அசத்தல்….#SunNews | #VavaSuresh | #snake | #Kerala pic.twitter.com/TROVCBJmET
— Sun News (@sunnewstamil) March 27, 2022