உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இங்கு பனிப்பாறைகள் உடைந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 10 பேர் பலியாகியுள்ளனர் இந்த துயர நிலை குறித்து தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமியும் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட்- அலக்நந்தா,தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து உண்டான வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள துயரச்செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. pic.twitter.com/wvYu6Y0z5V
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 8, 2021
https://twitter.com/CMOTamilNadu/status/1358758448133906432?s=20