Connect with us

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முட்டாள் தனமானக் கேள்வி! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

President Trump

Corona (Covid-19)

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முட்டாள் தனமானக் கேள்வி! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் கிருமிநாசினிகளை மனித உடலில் செலுத்தி அவற்றைக் கொல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு இதுவரை 9,25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 52.296 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் அந்த நாடு போராடி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மருத்துவ நிபுணர்களுடனான உரையாடலில் அதிபர் ட்ரம்ப் “கிருமிநாசினி கொரோனாவை கொல்வதால் அதை மனித உடலில் செலுத்தி சோதிக்க முடியாதா?” என கேள்வி எழுப்பியதாக வெளியான தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதை மருத்துவ குழுவினரை கிண்டல் செய்யும் நோக்கத்தில் பேசினார் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த அபாயகரமான சூழலில் அவருக்கு கிண்டல் ரொம்ப அவசியமா என்ற ரீதியில் ட்ரம்ப்பின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிபர் ட்ரம்ப்பின் பேச்சை தொடர்ந்து இதுகுறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருவதாக லைசால் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு- இனிமேல் பழைய படங்கள்தான் கதி

More in Corona (Covid-19)

To Top