Connect with us

யுபிஎஸ் ஜெனரேட்டர் வாங்கிக்கொள்ளுங்கள் மின்வெட்டு வரலாம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Entertainment

யுபிஎஸ் ஜெனரேட்டர் வாங்கிக்கொள்ளுங்கள் மின்வெட்டு வரலாம்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. அந்த நேரத்தில் திமுகவினர் ஆட்சியில் இருந்தனர் அந்த 2008ம் ஆண்டு மின்வெட்டை விமர்சித்து இன்று வரை மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதே போல் ஒரு கடுமையான மின்வெட்டு நிலைமை மீண்டும் தமிழ்நாட்டில் ஏற்பட போகிறது என பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.ஜி எனர்ஜி என்ற பெயரில் உள்ள நிறுவனத்துடன் திமுக அரசு மின் சார்ந்த திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது ஒரு தவறான நிறுவனம் இந்த நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்பட இருக்கிறது அதனால் யுபிஎஸ், இன்வெர்ட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

More in Entertainment

To Top