உலகப்புகழ் பாடகரான எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி காலமானார். பாடகர் எஸ்.பி.பியின் மறைவை யாராலும் தாங்கி கொள்ள முடியவில்லை இசையுலகுக்கு அவரின் மரணம் ஓர் பேரிழப்பு என்றால் மிகையாகாது.
எஸ்.பி.பி இறந்து 3 மாதங்களாகியும் அவரைப்பற்றிய நினைவுகளிலிருந்து பலரும் மீளவில்லை. பாடகர் உன்னிமேனன் எஸ்.பி.பியை போற்றி பாடி பறந்த கிளி என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மிக உருக்கமாக அந்த பாடலை பாடியுள்ளார் அவர்.