இந்தியாவில், ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், ஜூலை மாதம் இறுதியில் அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்த பிறகு பள்ளி – கல்லூரிகளைத் திறக்க முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி அள்ளித்துள்ளது. அதன்படி, அன்லாக்-1.0, ஜுன் – 8 ஆம் தேதி முதல் என்னென்ன தளர்வுகள் இருக்கும் மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. அதன்படி,
ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்களை திறக்க அனுமதி;
ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க அனுமதி;
மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்;
கொரொனா தொற்றின் தாக்கத்தைப் பொருத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் விமானங்களை இயக்க அனுமதி;
தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சூழலை பொறுத்து திறக்க அனுமதி;
இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது! என ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.