Latest News
மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சென்னை பல்கலைக்கழகம்!
இந்தியாவில், கொரொனா ஊரடங்கால் கல்வி நிலையங்களுக்கான பொதுத்தேர்வுகள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள், மாணவர் சேர்க்கை என அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் இதுவரை கல்வி நிலையங்கள், கல்லூரிகள் திறக்கும் தேதிகள் குறித்து எந்தவொரு அதிகாரபுர்வமான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதுகலைப் படிப்புகளுக்கான எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ உள்ளிட்ட பிரிவுகளில் பயில விரும்பும் மாணவர்களும், முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட பிரிவுகளும், இந்த மாதம் 22-ம் தேதி முதல் www.unom.ac.in என்கிற இணையதள பக்கத்தின் முலம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.