வயிற்றுப்புண் மற்றும் பல நோய்களை போக்கும் அதிமதுரம்

வயிற்றுப்புண் மற்றும் பல நோய்களை போக்கும் அதிமதுரம்

நாட்டுமருந்து கடைகளில் அதிமதுரம் கிடைக்கும் இதை மருந்துகளில் கலந்தாலே இனிப்பு சுவையை கொடுத்துவிடும். நெல்லிக்காய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் ஒரு இனிப்பு சுவை தெரியுமல்லவா அதுபோல அதிமதுரத்தை கஷாயமாக சாப்பிடும்போது நாவில் அதன் இனிப்பு சுவை ஒரு ஓரமாக இருந்து கொண்டே இருக்கும்.

இப்போது அதிமதுரத்தின் பயன்கள் பற்றி பார்ப்போம்.

அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை வகைக்கு 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

சிலர் காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும். மூட்டுவலி பிரச்சனைகள் வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது.