Latest News
உக்ரைனில் போர் பதற்றம்- பூமிக்கு அடியில் பதுங்கி உள்ள தமிழக மாணவர்கள்
உக்ரைன் மீது கோபம் கொண்டுள்ள ரஷ்யா, உலக நாடுகளின் பேச்சுக்களை மீறி தொடர்ந்து உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. அங்கு பல இடங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது ரஷ்யா.
போரை நிறுத்த உலக நாட்டு தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.
அப்படியாக மருத்துவம் படித்து வரும் தமிழக மாணவர்கள் சிலர் அங்கிருந்து வர முடியாமல் பூமிக்கு அடியில் பதுங்கி உள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது.