Latest News
உக்ரைன் ராணுவத்தில் இந்திய மாணவர்- உளவுத்துறை விசாரணை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் போதிய பலம் இல்லாத உக்ரைன் அனைவரையும் உக்ரைனுக்கு ஆதரவாக இழுத்து வருகிறது.
யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளும் மனநிலையில் உக்ரைன் தற்போது இருந்து வருகிறது.
இதற்காக உக்ரைன் நாட்டுக்கு வருவதற்கு அனைத்து வழிகளையும் எளிமையாக்கி வைத்துள்ளது உக்ரைன்.
இந்நிலையில் பல மாணவர்கள் போர் காரணமாக இந்தியா திரும்பி வரும் சூழலில் கடந்த 2018ம் வருடம் முதல் உக்ரைனில் விமானவியல் படித்து வந்த சாய்நிகேஷ் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக அந்த நாட்டு ராணுவத்தில் இணைந்து பணிபுரிகிறார்.
இது குறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.