cinema news
போரை நிறுத்த வைரமுத்து எழுதிய கவிதை
ரஷ்யா உக்ரைன் இடையே கடும் போர் நடந்து வரும் சூழலில் இதற்காக கவிஞர் வைரமுத்து உணர்வு பொங்க ஒரு கவிதை எழுதியுள்ளார் அந்த கவிதை இதோ.
போரை நிறுத்துங்கள்
புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்
கரும்புகை வான் விழுங்கும்
பகலை இருள் குடிக்கும்
கடல்கள் தீப்பிடிக்கும்
குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின் மண்பானை உடையும்
ஆயுதம் மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின்
என வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்.