உக்ரைன் விவகாரம்- நீட் தேர்வு விவகாரத்துக்கு வலு சேர்த்துள்ளது

உக்ரைன் விவகாரம்- நீட் தேர்வு விவகாரத்துக்கு வலு சேர்த்துள்ளது

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக அரசு தொடர்ந்து வற்புறுத்தி  வருகிறது. இருப்பினும் மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதற்கில்லை நீட் தேர்வு உறுதிதான் என தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா போன்ற நாடுகளில் டாக்டருக்கு படிக்க இங்கிருந்து அதிகமான பேர் செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் தற்போது நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இருப்பினும் சிறிது சிறிதாக பலர் மீட்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பேசிய பிரதமர், நம்ம நாட்டிலே அனைவரும் டாக்டருக்கு படிக்க முயற்சி செய்ய வேண்டும் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.

இது குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள்.

இங்கு நீட் தேர்வை ரத்து செய்தாலே அனைவரும் இங்கு படிப்பார்கள் அதற்கான நேரம் வந்து விட்டது என ஸ்டாலின் கூறியுள்ளார்.