Latest News
உக்ரைன் – இந்தியர்களை ஏற்றிக்கொண்டு விமானம் வந்தடைந்தது
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடும் போர் நடந்து வருவதால் அங்கு உள்ள மக்கள் அயல்நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யா உக்ரைனில் கடுமையான ஏவுகணைகளை ஏவி உக்ரைன் நாட்டை கைப்பற்ற துடித்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவம் படிப்பதற்காக பல இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதால் அவர்களை மீட்டு வர அவர்களின் உறவினர்கள் சார்பில் தொடர் கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் உக்ரைன் அரசை தொடர்பு கொண்ட இந்திய அரசு இந்திய மாணவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள கூறியதுடன் விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வர செய்தது.
இதுவரை மூன்று விமானங்களில் 700க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கடைசி இந்தியர் இருக்கும் வரை அனைவரும் மீட்கப்படுவர் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
