குடும்ப அரசியல் இல்லை.. இதுதான் என் குடும்பம் – உதயநிதி வெளியிட்ட புகைப்படம்

222

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகரும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெளியிட்டுள்ள புகைப்படம் திமுவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகராக வலம் வரும் உதயநிதி தேர்தல் நேரங்களில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு உதயநிதியின் பிரச்சாரமும் காரணம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. எனவே, உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது.

எனவே, திமுக குடும்ப அரசியல் செய்வதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இந்நிலையில், திமுக நிர்வாகிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘ குடும்ப அரசியல் என்பார்கள். ஆம். இதுதான் என் குடும்பம்’ என பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  விஜயின் புதிய திரைப்படம் - தெறிக்க விடும் தகவல்கள் உங்களுக்காக!