ஏரிக்கு சிவப்பு கம்பளம் போட்டது இவங்கதான்.. வைரலாகும் உதயநிதி புகைப்படம்

216

தூர் வாருவது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் ஒரு ஏரிக்கு பார்வையிட சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சியான திமுக தரப்பில் தமிழகத்தில் உள்ள சில ஏரிகளில் தூர் வாருவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு ஏரியை பார்வையிட நடிகரும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பார்வையிட சென்றார்.

அப்போது அந்த கம்மாயில் அவர் நடந்து வருவதற்காக சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாட்டை திமுகவினர் செய்திருந்தனர். அதேபோல் அங்கு திமுக கொடிகளும் நடப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகவே நெட்டிசன்கள் பலரும் அதை கிண்டலடித்து ட்விட் செய்து வருகின்றனர்.

உலகத்திலேயே கம்மாயில் சிவப்புக் கம்பளம் விரித்த கட்சியினர் திமுகவினர் திமுகவினர் தான் என்கிற ரீதியில் அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 

பாருங்க:  எனது மகள் சித்ரா மரணத்துக்கு ஹேமானந்த் காரணம்- சித்ரா அம்மாவின் ஆவேசப்பேட்டி