cinema news
உதயநிதியை சந்தித்த பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கி கொடுத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் பேரறிவாளன். இவருக்கு முதலில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.
பின்பு இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதியாகவும் பல வருடங்களாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய கோரிக்கை பல வருடங்களாக இருந்தது.
பல வருடமாக தீர்வில்லாமல் இருந்தது பேரறிவாளனின் விடுதலை. கடந்த வாரத்தில் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை எடுத்து விசாரித்து பேரறிவாளனுக்கு விடுதலை என தீர்ப்பு சொன்னது.
இந்த நிலையில் பல வருடத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் முக்கிய தலைவர்கள் பலரை சந்தித்து வருகிறார். அதில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்துள்ளார். இது குறித்து உதயநிதி கூறியிருப்பதாவது,
கழக அரசின் தொடர் முன்னெடுப்பால் 31 ஆண்டு சிறைவாசத்திலிருந்து முழுமையான விடுதலையை அடைந்துள்ள அண்ணன் பேரறிவாளன் அவர்கள் அற்புதம்மாள் அவர்களுடன், சேலம் படப்பிடிப்பில் இருந்த என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இனி வரும் காலங்கள் மகிழ்ச்சியால் நிரம்ப வாழ்த்துகள்.