பெயர் ஞாபகம் உள்ளது மிரட்டும் வகையில் பேசிய உதயநிதி

பெயர் ஞாபகம் உள்ளது மிரட்டும் வகையில் பேசிய உதயநிதி

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் சென்று வருகிறார். நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

அப்படி ஒரு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியுள்ள உதயநிதி  சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் அவர்களை மறைமுகமாக மிரட்டும் வகையில் பேசியுள்ளார். முதல்வர் எடப்பாடி சொல்படி சிறப்பு டிஜிபி நடந்து வருகிறார். எங்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கிறது.இன்னும் 5 மாதங்கள்தான் உள்ளது நாங்களும் ஆட்சிக்கட்டிலில் அமர்வோம் என உதயநிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.