Connect with us

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த சான்றிதழ் என்ன தெரியுமா

cinema news

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த சான்றிதழ் என்ன தெரியுமா

தமிழில் கனா படம் மூலம் இயக்குனராக அறியப்பட்டவர் அருண்ராஜா காமராஜ். வித்தியாசமான கதைக்களம் கொண்ட கனா திரைப்படம் வெற்றி பெற்றது.

இவர் தற்போது நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். உதயநிதியின் தாத்தா கலைஞர் அவர்கள் எழுதிய நாவலின் தலைப்பையே படத்துக்கு சூட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற ஆர்ட்டிகள் 15 படத்தின் ரீமேக் ஆகும்.

உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சென்சார் போர்டு சான்றிதழ்  வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு  யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.

More in cinema news

To Top