தினம் தோறும் திமுக கட்சியையும் அதன் நடவடிக்கைகளையும் துவைத்து தொங்க விடுபவர் நடிகர் எஸ்.வி சேகர். இவர் திமுக தலைவர் ஸ்டாலினையும் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் தினமும் கடுமையான முறையில் எஸ்.வி சேகர் விமர்சிப்பார் அப்படிப்பட்டவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது ஆச்சரியமாக உள்ளது.
இது குறித்து எஸ்.வி சேகரிடம் கேட்டபோது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலினை சந்திக்க சென்றார்கள்.
அவர்களுடன் நானும் சென்றேன்.. அங்கே சென்ற பிறகுதான் உதயநிதிக்கு பிறந்த நாள் என்று தெரிய வந்தது. அதனால், அவரை வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தேன். அவருடைய படம் ஒன்றிலும் நடிக்கிறேன். அந்த படத்தின் நாயகனுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நண்பர்கள், யாரும் எதிரியல்ல” என்றார்.