ஜிவி பிரகாஷ், மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் இடி முழக்கம். இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சமீபத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி பார்த்துள்ளார்.
பார்த்து விட்டு இயக்குனரை மனம் திறந்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரையும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இதை குறிப்பிட்டுள்ள சீனு ராமசாமி கூறியுள்ளதாவது,திரைப்படம் வெளியாகி சினிமா நண்பர்கள் யாரும் இயக்குநரை அழைக்கவில்லையெனில் அப்படம் வெற்றி என்பது நானறிந்த சூத்திரம் ஆனால் இடிமுழக்கம் சிறப்புகாட்சி பார்த்ததும் என்னை மட்டுமல்ல
ஜிவி பிரகாஷ்
சரண்யா பொன்வண்ணன் ஆகியோரை அலைபேசியில் பாராட்டிய பரந்தமனம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.