Connect with us

Latest News

அனைத்து நற்பலன்களையும் தரும் உச்சிஷ்ட கணபதி வழிபாடு செய்யும் முறை முழு விளக்கம்

Published

on

திருமண தடைகள் நீங்க, காதல் கைகூட, பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரந்து சண்டை சச்சரவின்றி கருத்தொருமித்து நெருக்கமாக வாழவும் ,தாம்பத்திய உறவு பலப்படவும், செல்வச் சேர்க்கைக்கும் உச்சிஷ்ட கணபதி உபாசனை மிகச் சிறந்தது.

தந்திர சாஸ்திரத்தில் மகா காளி போல உச்சிஷ்ட கணபதிக்கும் அதிக முக்கியத்துவமும் சிறப்பும் அளிக்கப்படுகிறது.

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு உச்சிஷ்ட கணபதிக்கு நிறைய உண்டு. விநாயகருடைய 32 வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. ‘உச்சிஷ்டம்’ என்றால் எச்சில் படுத்துதல் என்று பொருள்.
யாத-யாமம் கத-ரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸ ப்ரியம் ||(கீதை 17.10).

இங்கே ‘ உச்சிஷ்டம்’என்பது மீந்து போனது எச்சில் பட்டது என்ற பொருளைக் குறித்தாலும் இந்த உபாசனையை பொருத்தவரை மிகவும் தெய்வீகத்தன்மையாகவே கருதப்படுகிறது. சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் ஒரு யோகி கடக்க வேண்டும். பிராமணி அம்மாள் பகவான் ராமகிருஷ்ணருக்கு இதைத்தான் அடிக்கடி கூறுவார். தந்திர சாஸ்திரம் இடது கை உபாசனை , எச்சில், தீட்டு இவற்றை புறக்கணிப்பது இல்லை. இதைக்கருத்தில் கொண்டே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவானது.இதை சரியாகப் பரிந்து கொண்டவர்கள் மட்டுமே தந்திர சாதனத்திற்கும் இந்த உச்சிஷ்ட கணபதி உபாசனைக்கும் தகுதியுள்ளவர்கள். மஹாநிர்வாண தந்திரத்தில் உச்சிஷ்ட கணபதி தனது சக்தி தேவியின் குஹ்யத்தில் (உபஸ்தானத்தில்) தனது தும்பிக்கையை வைத்துள்ள ஆனந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்று கூறுகிறது .இதை உச்சிஷ்ட கணபதி சகஸ்ரநாமாவளி 103 -104-118-119 வரிகள் உறுதிப்படுத்துகின்றன. ) இதன் மூலம், எதுவும் நிசித்தமில்லை ஏற்றுக்கொள்ளத் தக்கதே என்பது உணர்த்தப்படுகிறது. சாக்தத்திலும் ‘யோனி பூஜை’ என்றொரு வாமாச்சார சம்பிரதாயம் இருந்தது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.இங்கு தெரிய வேண்டியது இவர் கிரியா சக்தியை தனது இச்சா சத்தியால் ஸ்பரிசிப்பதால் ஞான சக்தி தானே உதயமாகி பக்தர்களை ஆட்கொள்கிறது என்பதுதான். உச்சிஷ்ட கணபதிக்கு முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவதும் மரபாக உள்ளது. முதுகு காட்டுவது என்பது ஒருவரை புறக்கணிப்பதாகக் குறிக்கும். ஆனால், கடவுளுக்கு முகம், முதுகு என்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்கு மனிதனின் மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்கு முதுகு காட்டி வழிபடுகின்றனர்.
தாம்பூலம் தரித்த வாயுடன் இவருடைய மூல மந்திரம் ஜபித்து வந்தால் சீக்கிரம் மந்திரம் சித்தியாகும்.

பாருங்க:  சிபிராஜின் அன்னையர் தின வாழ்த்து

உச்சிஷ்ட கணபதி தியானம்

நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக||

குறிப்பு :
இவரது ஹோமத்திற்கு வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகள் சிறந்த பலன்கள் கிடைக்கும். கார்ய சித்தி உண்டாகும்.

இவரது உபாசனையின் பலன்கள்

உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி இருவருக்கும் இடையே பரஸ்பர வசியம் ஏற்பட்டு நெருக்கம் அதிகமாகி தாம்பத்திய உறவு (conjugal relationship) வலுப்படும். இருவருக்கும் இடயே திருஷ்டி காரணமாகவோ வேறு நபர்கள் காரணமாகவோ ஏற்பட்ட தடைகள் விலகும். தம்பதி ஒற்றுமை பலப்படும். ( tested ) .குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இந்த விநாயகரை வணங்கினால் குழந்தைச் செல்வம் உண்டாகும். மேலும் இந்த உபாசனையால் வாக்கு பலிதம் ஏற்பட்டு சொன்னது சொன்னபடி நடக்கும்.
மிக முக்கியமாகக் கவனிக்கவும்: இந்த மஹா மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று , குரு , தெய்வம்,மந்திரம் இம்மூன்றின் மீதும் அசைக்க முடியாத பூரண நம்பிக்கை வைத்து மனஒருமப்பாட்டுடன் மந்திரத்தை உருவேற்றி பூசை செய்துவரவெண்டியது. சீக்கிரம் மந்திரம் சித்தியாகும். உபாசகர்கள் கருப்பு,நீல ஆடைகள் தவிற்ககவும். மாறாக சிவப்பு, பொன்னிற ஆடைகள் அணியவும்.வினாயகருக்கு பிள்ளையார்
சதுர்த்தி தவிர மற்ற நாளில் துளசி வேண்டாம்.

வழிபாட்டின் பலன்கள்: மந்திர உபதேசம் பெற்று இவரை நன்கு வணங்கி , இவரது திரு உருவத்தை மனதில் இருத்தி மந்திர ஜபம் செய்து வேண்டிய வரம் பெற்று வாழவும். தம்பதிகள் ஒற்றுமையுடனும் நலமுடனும் மிக இணக்கமாக வாழ்வதோடு வாழ்வில் தன சேர்க்கையும் ஏற்படும். நல்ல காரியங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த நன்மைகள் தானே தேடிவரும். ருத்ர யாமள தந்திரம்,உட்டாமரேச தந்திரம்,பேத்கார தந்திரம் போன்ற நூல்கள் உச்சிஷ்ட கணபதி பற்றிக் கூறுவதாக அறியப்படுகிறது.

பாருங்க:  கமலஹாசனுக்கு கிடைத்த 786 அதிர்ஷ்ட எண்

 

சிவராஜ யோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்.

KAMAL
Entertainment7 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment10 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News10 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment10 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment10 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment10 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News10 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment10 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment10 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News10 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா