தமிழகத்தில் 2 காவல் அதிகாரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் ஆவடி வீராபுத்தில் உள்ள சிறப்பு காவலர் படை மூன்றாம் பிரிவில் பண்ணியாற்றி வந்தார். கடந்த 2ம் தேதி இரவு கீழ்பாக்கம் சிறப்பு ஆயுதப் படை தலைமை அலுவகத்தில் தனது 26வது பிறந்த நாளை கொண்டியுள்ளார். அதன்பின் 3ம் தேதி அதிகாலை துப்பாக்கியால் துட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணிச்சுமையா, குடும்ப பிரச்சனையா என்பது சரியாக தெரியவில்லை. காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தியும் வெளியானது. இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் அதிர்ச்சி அடங்குவதற்குள், காதலர் கைவிட்டதால் சிறைத்துறை பெண் அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வி திருச்சி பெண்கள் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு அவர் தங்கியிருந்த காவலர் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதல் கட்ட விசாரணையில், சிறையில் பணியாற்றும் வேறொரு காவலரை அவர் காதலித்ததாகவும், ஆனால், அவரை கைவிட்டு வேறுஒரு பெண்ணுடன் அவருக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாலும் மனமுடைந்து செந்தமிழ்ச் செல்வி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இப்படி அடுத்தடுத்து இரு இளம் காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.