பூனைகளுக்கும் பரவியதா கொரோனா? அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி!

பூனைகளுக்கும் பரவியதா கொரோனா? அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையோ 1.6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை மனிதர்களை மட்டுமே பெருமளவில் பாதித்து வந்த கொரோனா வைரஸ் இப்போது விலங்குகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த புலி ஒன்றுக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இப்போது இரண்டு பூனைகளுக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டு விலங்குகளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவினால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் வனவிலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்க அரசு விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் ஒளியாகி உள்ளது.