புரட்டாசியில் வரும் இரண்டு அமாவாசை மறவாதீர்

40

புரட்டாசியில் வரும் அமாவாசையை மஹாளயபட்சம் அமாவாசை என்பர். இறந்து போன நம் முன்னோர்கள் பூமிக்கு இந்த நாட்களில் எழுந்தருளி ஆசிர்வாதம் செய்வார்கள் என்பது ஐதீகம் இதனால் இந்த மஹாளய பட்ச அமாவாசைக்கு நீர் நிலைகளில் அதிக கூட்டங்கள் வரும். இந்த வருடம் மஹாளய அமாவாசை கடந்த புரட்டாசி 1ம் தேதியே வந்து விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அதிக கூட்டம் வரும் என்பதால் பெரிய புண்ணிய தீர்த்தங்களுக்கு மக்கள் கூட்டம் வருவதற்கு அரசு அனுமதி மறுத்தது.

இந்த நிலையில் இந்த புரட்டாசி மாதம் இரண்டு  அமாவாசைகள் வருகிறது. இது எப்போதாவது நடக்க கூடிய அரிய நிகழ்வு மாதத்தின் முதல் நாளும் கடைசி நாளுமாக இரண்டு அமாவாசையும் புரட்டாசி மாதத்திலேயே வருவதால் புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசைக்கு முன்னோர்களுக்குரிய சிரார்த்த கடன்களை தவறவிட்டவர்கள் இந்த அமாவாசைக்கு கண்டிப்பாக செய்யலாம்.

வரும் 16.10.2020 அன்று இந்த இரண்டாவது அமாவாசை வருகிறது.

பாருங்க:  அனில்கபூரை பாராட்டிய பிரதமர் மோடி