Entertainment
எனது டுவிட்டர் பதிவை சர்ச்சையாக்க வேண்டாம்-சித்தார்த்
பிரிக்க முடியாதது என்னவோ எனக்கேட்டால் சித்தார்த் போடும் டுவிட்டும் சர்ச்சையும் என சொல்லலாம். அடிக்கடி பாஜகவை விமர்சனம் செய்து வருபவர் சித்தார்த். இதனால் இவர் போடும் உடனே பாஜக காரர்களின் பார்வையில் பட்டு பெரிய சர்ச்சையாகி விடுவது வாடிக்கையான விசயமாக உள்ளது.
நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “என் மனதில் தோன்றுவதை ஒவ்வொரு நாளும் நான் ட்வீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் ட்வீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல” என்று தெரிவித்துள்ளார்.
