Connect with us

டுவிட்டர் கணக்கு முடக்கம்- டுவிட்டர் நிர்வாகத்துக்கு கங்கனா காரசார கேள்வி

Entertainment

டுவிட்டர் கணக்கு முடக்கம்- டுவிட்டர் நிர்வாகத்துக்கு கங்கனா காரசார கேள்வி

டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்து சொல்கிறவர்களில் மிக மட்டமாக பேசுபவர்கள் எழுதுபவர்கள் அதிகம். இருப்பினும் இதை டுவிட்டர் , பேஸ்புக் போன்ற நிர்வாகமோ கண்டு கொள்வதில்லை.

இது ஒரு புறம் இருக்க கங்கணா ரணாவத்தின் பதிவுகள் அனைத்தும் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி அவரின் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் முடக்கியது.

கங்கணாவின் டுவிட்டர் கணக்கின் மீது பலரும் புகார் சொன்ன நிலையில்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது டுவிட்டர்.

சமீபத்தில் வெளியான தாண்டவ் வெப்சீரிஸில் ஹிந்து கடவுள்களை மோசமாக காட்டி இருப்பதாக வந்த செய்தியின் அடிப்படையில் கங்கணா தெரிவித்த டுவிட்டர் கருத்து பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த கருத்தை அவர் நீக்கி விட்டபோதும் பிரச்சினைகள் அவரை விடவில்லை அந்த கருத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே மஹாராஷ்டிர அரசு உடனான பிரச்சினை, வேளாண் விவசாயிகள் சட்டம் போன்ற விவசாய ரீதியான சட்டங்களில் அதிரடி கருத்து சொன்னதால் டுவிட்டர் நிர்வாகம் அவர் கணக்கை தற்காலிமாக முடக்கியுள்ளது.

இதற்கு பதிலளித்த கங்கணா, ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக்கை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தலையை வெட்டுவது என்பது ஒரு சொலவடை. அதற்கு திட்டுவது என்று அர்த்தம் என்பதை உங்கள் முட்டாள் பிரதிநிதிகளுக்கு புரியவையுங்கள். உண்மையில் அச்சுறுத்தும் நபர்களையும், தினமும் பிரதமர், உள்துறை அமைச்சர், துறவிகள், பிராமணர்கள் சாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மீதும் இதே போல நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  கங்கணாவின் விருதை திரும்ப பெற சீக்கிய அமைப்பு வலியுறுத்தல்

More in Entertainment

To Top