நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ; கைமாறிய ரூ.20 லட்சம் : மாணவனின் தந்தை வாக்குமூலம்

184
udit surya

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் ரூ. 20 லட்சம் லஞ்சம் விளையாடிய விவகாரம் தெரிய வந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா. இவர் மும்பையில் நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று, கலந்தாய்வில் கலந்த் கொண்டு தேனி மருத்த்து கல்லுரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார். இவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவருக்காக தேர்வு எழுதிய நபர் மீதும், உதித் சூர்யா மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான உதித் சூர்யாவை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. செல்போன் டவரை வைத்து அவரை குடும்பத்தோடு திருப்பதியில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு சிபிசிஐடி விசாரணை செய்தனர்.

இதில், ஆள் மாறாட்டம் செய்வதற்காக கேரளாவை சேர்ந்த ஒரு இடைத்தரகருக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் பலரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  மாளவிகா மோகனன் பாராட்டிய கமல் படம்