கொரோனா வைரஸ் பீதியால் சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் இப்போது சீரியல்களின் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பப் படுகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் கடந்த 19 ஆம் தேதியே நிறுத்தப்பட்டன.
இதனால் இதுவரை கைவசம் இருந்த எபிசோட்களை ஒளிப்பரப்பி வந்த தொலைக்காட்சி சேனல்கள் இப்போது புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் சில தொலைக்காட்சி சேனல்கள் பழைய பிரபலமான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன.