Latest News
புகழ்பெற்ற கீழக்கரை துதல் ஹல்வா
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புகழ்பெற்றது துதல் ஹல்வா. இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இந்த ஊரின் முக்கிய தொழில் மீன் பிடித்தல்.
பல இஸ்லாமியர்கள், துபாய், மலேசியா, சிங்கப்பூர், சவுதி, பஹ்ரைன், கத்தார் என பல நாடுகளில் தொழில் செய்து வாழ்கின்றனர்.
இந்த ஊரில் துதல் ஹல்வா மிக புகழ்பெற்றது. துதல் ஹல்வா என்பது இலங்கையை சார்ந்த ஒரு ஸ்வீட் என சொல்லப்படுகிறது.
அந்தக்காலத்தில் இலங்கையில் தொழில் செய்த இஸ்லாமியர்களால் கீழக்கரையில் இந்த ஸ்வீட் பரவி இப்போது வெளியூர்களுக்கு வெளிநாடுகளுக்கு எல்லாம் இந்த ஸ்வீட் அனுப்பபடுகிறது.
சுத்தமான கருப்பட்டி, தேங்காய் எண்ணெய், பாசிப்பருப்பு கலந்து செய்யப்படும் இந்த ஸ்வீட் அவ்வளவு திகட்டாத ஒரு ஸ்வீட் ஆகும்.
பல இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இந்த ஸ்வீட்டை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இஸ்லாமியர்கள் இந்த ஊருக்கு வந்தால் துதல் ஹல்வா என்ற இந்த ஸ்வீட்டை வாங்காமல் செல்ல மாட்டார்கள்.
மிக சுவையானது இந்த துதல் ஹல்வா . நீங்களும் இந்த பகுதிக்கு சென்றால் கீழக்கரை துதல் ஹல்வாவை வாங்க மறவாதீர்கள்.
தமிழக அளவில் கீழக்கரையில்தான் இந்த ஸ்வீட் மிகவும் புகழ்பெற்றது ஆகும்.
