தூத்துக்குடி அருகே வாகனம் ஏற்றி எஸ்.ஐ கொலை

25

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது ஏரல்.  ஏரல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பாலு என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் அருகே உள்ள கொற்கை என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தபோது போதையில் முருகவேல் என்பவர் சுற்றி திரிந்துள்ளார் இதனை எஸ்.ஐ பாலு கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் தான் ஓட்டும் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலு மீது மோதி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்த முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாருங்க:  Athi Varadar Day 23 Darshan Special Ticket Update - athi varadar rs 300 ticket!