Published
10 months agoon
தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சாத்தான் குளம் காவல் நிலைய கொலை நடந்தது. இது இந்தியாவையே அதிர வைத்தது இருப்பினும் எவ்வளவு கொலைகள் நடந்தாலும் சில காவலர்கள் திருந்துவதில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே கிருஷ்ணா நகரில் வசித்த ஒரு பெண் நகையை காணவில்லை என பக்கத்து வீட்டு பெண் சுமதி என்பவர் மேல் புகார் கொடுக்க, சுமதி என்ற பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்ற பெண் போலீசார் அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இது பற்றி மேலதிகாரிகளுக்கும் சொல்லவில்லை. இதை சொல்ல வேண்டிய தனிப்பிரிவு காவலர் முருகனும் இதை சொல்லவில்லை. இந்நிலையில் போலீசார் அடித்து உதைத்ததால் மன உளைச்சல் அடைந்த சுமதி என்ற அந்த பெண் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரித்த எஸ்.பி பாலாஜி சரவணன் தனிப்பிரிவு ஏட்டு முருகனைஆயுதப்படைக்கு மாற்றியும் பெண்ணை அடித்த மூன்று பெண் காவலர்களை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி பகுதியில் இன்று முதல்வர் ஆய்வு
நைட் ஷோ படத்துக்கு போன பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்
பெண் வயிற்றுக்குள் இருந்த வித்தியாசமான கட்டி
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை
தூத்துக்குடியில் கொடூரம் கண்டெய்னர் விழுந்து தொழிலாளி பலி
பெண்ணை ஹோட்டலுக்குள் விட மறுத்த ஊழியர்கள்