Tamil Flash News
புகழேந்தி ஆடியோ குறித்து உரிய விசாரணை – டிடிவி தினகரன் பேட்டி
டிடிவி தினகரனின் அமமுக-லிருந்து பெங்களூர் புகழேந்தி வெளியேற இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில நிர்வாகிகளுடன் புகழேந்தி ஒரு ஹோட்டலின் அறையில் பேசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. டிடிவி தினகரன் மீது அதிருப்தியில் இருக்கும் அந்த நிர்வாகிகளிடம் பேசும் புகழேந்தி ‘பொறுமையாக இருங்கள் நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. 14 வருடங்கள் யாரென்றே தெரியாத தினகரனை ஊருக்கே வெளிக்காட்டியது நான்தான். நமக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறுவோம். நான் செல்லும்போது உங்களையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்’ என பேசும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.
எனவே அமமுகவில் இருந்து புகழேந்தி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் மீது அதிருப்தியில் இருந்தபோது அவர் தினகரனை திட்டுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை அமமுகவின் ஐடி விங் தான் வெளியிடுகிறது என செய்திகள் கசிந்து வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன் ‘அந்த வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அமமுகவில் இருந்து தொண்டர்கள் வெளியேறுவது அவர்களின் சொந்த விருப்பம். அந்த வீடியோவை அமமுக நிர்வாகிகள் வெளியிட்டதாக தெரியவில்லை. எங்களின் நோக்கம் எல்லாம் அம்மாவின் தலைமையின் கீழ் இயக்கத்தையும், சின்னத்தையும் மீட்டெடுப்பது மட்டுமே’ என தெரிவித்தார்.