ஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை

ஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை – தினகரன் போடும் கணக்கு

சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சில இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவிருக்கிறது. கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களையும், அதிமுக 4 இடங்களை பிடிக்கும் எனவும், மீதமுள்ள 5 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை 01

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை சேர்த்து திமுகவுக்கு ஏற்கனவே 89 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். தற்போது திமுகவின் பலம் மேலும் கூடினால் சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு, திமுகவோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் கூறி வரும் நிலையில், அதிமுக ஆட்சி கவிழும் நிலை ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால், தினகரன் ஆட்சி கலைப்பை விரும்ப மாட்டார். ஆட்சி மாற்றத்தையே விரும்புவர் என சில அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க அவர் துணை நின்றால், அது ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் செயல்பட்டது போன்ற தோற்றத்தை அதிமுகவின் ஏற்படுத்திவிடுவார்கள். மேலும், ஆட்சி கவிழ்ப்பால் திமுகவிற்குத்தான் லாபமே தவிர தினகரனுக்கு எந்த லாபமும் இல்லை.

தற்போதுள்ள சூழ்நிலையில், அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 5 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். அப்படி இல்லாமல் அமமுக 5 தொகுதிகளில் வெற்று பெற்றால், ஆட்சியை தக்க வைக்க தினகரனின் உதவியை எடப்பாடி பழனிச்சாமி வேண்டுவார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு தான் கூறும் நபரை முதல்வராக்க வேண்டும் என தினகரன் கண்டிஷன் போட வாய்ப்புண்டு என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பது நாளை மாலைக்குள் தெரிந்துவிடும்.