தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11 மருத்துவக்கல்லூரிகளை புதிதாக அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நாமக்கல், இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய இருக்கிறது.
இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் 2021ல் திறப்பு விழா காணும் வகையில் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மருத்துவக்கல்லூரியின் கட்டுமானம் இடிந்து விழுந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து பேசிய அமமுக கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், நாமக்கல் மருத்துவக்கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்ததா இல்லை திட்டமிடாமல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதா இது குறித்து முதல்வர் பழனிச்சாமி விளக்கமளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.