Tamil Flash News
எம்.ஜி.ஆரும்.. ஜெயலலிதாவும் ஓடியிருப்பங்க- முதல்வரை கலாய்த்த தினகரன்!
அமமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் செல்லும் இடமெங்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விளாசி வருகிறார்.
18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு 4 தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே, அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோவை சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை வெளுத்து வாங்கினார்.
“புரட்சி என்கிற வார்த்தையை யாருக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாமல், மதுரையில் புரட்சிப் பெருந்தகையே என எடப்பாடி பழனிச்சாமிக்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதை மட்டும் கேட்டிருந்தால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எங்களுக்கு புரட்சி என்கிற பட்டமே வேண்டாம் எனக்கூறிவிட்டு ஓடியிருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி பெருந்தகை என்பதற்கு பதிலாக புரட்சி பெருந்தொகை என பெயர் வைத்திருக்கலாம். மோடிக்கு மண்டியிடும் அவருக்கு இப்படியா பெயர் வைப்பது?” எனப் பேசி அங்கிருந்தவரகளின் கைதட்டலை வாங்கினார்.