மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அமமுக வேட்பாளர்கள் – தினகரன் அதிர்ச்சி

221
ஆட்சி மாற்றம்தான்.. ஆட்சி கவிழ்ப்பு இல்லை

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தினகரனின் அமமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தை சேர்த்து இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதுள்ள நிலையில் 348 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல்,தமிழகத்தில் அதிமுக 38 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றனர். எனவே, திமுக அதிக இடங்களை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுகவும், 9 இடங்களில் அதிமுகவும் முன்னணியில் உள்ளது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் முன்னணியில் கூட வரவில்லை.  மக்களவை தேர்தலுக்காக 39 தொகுதிகளும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்களையும் தினகரன் நிறுத்தினார்.  ஆனால், ஒருவர் கூட முன்னணியில் கூட வரவில்லை. சில தொகுதிகளில் அவர்கள் 3ம் இடத்திலும், சில தொகுதிகளில் 4ம் இடத்திலும் தள்ளப்பட்டனர்.

இந்த தேர்தல் முடிவு தினகரன் தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  தர்ஷன் வெளியேற்றமா? - ஹேஷ்டேக் மூலம் விஜய் டிவியை அசிங்கப்படுத்திய ரசிகர்கள்