Tamil Flash News
நாங்கள் போட்ட ஓட்டுக்கள் எங்கே போனது? – தினகரன் பேட்டி
300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு போடப்பட்ட வாக்குகள் கணக்கிலேயே வரவில்லை என டிடிவி தினகரன் புகார் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ஆனால், தேர்தல் முடிவுகளில் அமமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இது டிடிவி தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “இந்த தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், பல வாக்குச்சாவடிகளில் எங்களுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது. அங்க இருந்த 4 முகவர்கள் போட்ட ஓட்டு கூட பதிவாகவில்லை.இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் கூறவேண்டும்” என அவர் தெரிவித்தார்.