Entertainment
டிடிவி தினகரன் குறித்து அமைச்சர் சண்முகம் சர்ச்சை பேச்சு
தமிழக சட்ட அமைச்சராக இருப்பவர் சிவி. சண்முகம். ஆரம்பத்தில் தீவிர சசிகலா ஆதரவாளராய் இருந்தவர் இவர். தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் மெரினா கடற்கரையில் தர்மயுத்தம் நடத்தியபோது கூட சிவி சண்முகம் அதை எதிர்த்து கடுமையாக பேசியவர்.
தற்போது அந்தக்காலம் மறைந்து விட்டது. சசிகலா உள்ளிட்டோருக்கு பெரிய போட்டியாளர்களாக அதிமுகவினர் அனைவரும் இருக்கிறார்கள். சசிகலா ஜெயிலில் இருந்து வருகிறார் என்று சொல்ல ஆரம்பித்ததில் இருந்தே சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சரின் பேச்சு அதிரடியாக உள்ளது.
இன்று பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் டி.டி.வி. தினகரனுடைய குலத்தொழில் ஊத்திக் கொடுப்பது” கூவத்தூரில் ஊத்தி கொடுத்து குடியை கெடுத்தவர் அவர் என அதிரடியாக பேசியுள்ளார் அமைச்சர்.
