Tamil Flash News
TTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம்!
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 59 தொகுதிகளிலும் ‘பரிசு பெட்டி’ சின்னத்தில் போட்டியிட வேண்டும் என அமமுக விற்கு தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
ஆர்.கே நகரில் குக்கர் சின்னத்தில் வெற்றிப் பெற்றதால், குக்கர் சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னம் கொடுக்க மறுத்துவிட்டது. கட்சியை பதிவு செய்ய கூறி உத்திரவிட்டது.
ஆனால் அவர்கள் தேர்தலில் வென்றால் சுயேச்சையாக தான் கருதப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலுக்கு இன்னும் நாட்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் சின்னம் இல்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை நீடித்தது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தேர்தல் ஆணையம் தரப்பில் டிடிவி தினகரன் அணிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
டிடிவி அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள் பாண்டிச்சேரி 1 தொகுதி, தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் என மொத்தம் 59 தொகுதிகளில் டிடிவி அணிக்கு அவருக்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் டிடிவி தினகரன் அணி இந்த தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் மூலம் 59 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பரிசுப்பெட்டி சின்னத்தில் தினகரன் அணியினர் போட்டியிட்டாலும் அவர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள்.