Latest News
திரிஷா நடிக்க வந்து 19 வருடங்கள் நிறைவு
கடந்த 1999ம் ஆண்டு வெளிவந்த ஜோடி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. இந்த படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்து இருந்தார் அதனால் த்ரிஷாவின் திரைப்பயணத்தில் இந்த படத்திற்கு முக்கிய இடமில்லை.
2002ல் வெளிவந்த மெளனம் பேசியதே படத்தில் நடித்ததன் மூலம்தான் த்ரிஷா அறிமுகமானார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி போல நடித்தார் இதிலும் இவர் முழுமையான கதாநாயகி இல்லை, ஏனென்றால் படத்தின் கதாநாயகன் சூர்யா பெண்களை கண்டாலே வெறுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அடுத்ததாக மனசெல்லாம் , சாமி, லேசா லேசா படங்களில் நடித்து புகழ்பெற்றார். அஜீத், விஜய், விக்ரம்,கமல், ரஜினி, தனுஷ், சிம்பு என அனைத்து முன்னணி ஹீரோக்கள் உடனும் இவர் நடித்துவிட்டார்.
இன்னும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா இன்றும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். 1999ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் சென்னை அழகி போட்டியிலும் த்ரிஷா வென்றுள்ளார் . 2010ல் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார்.
இன்றுடன் த்ரிஷா நடிக்க வந்து 19 வருடங்கள் நிறைவு பெறுகின்றனவாம். வாழ்த்துக்கள் த்ரிஷா.
