Connect with us

டிக் டாக் திருச்சி சாதனா மீது சென்ற புகார்- அழைத்து எச்சரித்த போலீஸ்

Entertainment

டிக் டாக் திருச்சி சாதனா மீது சென்ற புகார்- அழைத்து எச்சரித்த போலீஸ்

திருச்சியை சேர்ந்தவர் சாதனா. இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் போட்ட ஆட்டம் பாட்டத்தால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். டிக் டாக் தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம், மற்றும் யூ டியூப், பேஸ்புக் ரீல்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் டான்ஸ் வீடியோக்கள் மட்டுமே போட்டு வந்த இவர், காலை எழுந்தது முதல் இரவு வரை பல ஆபாச அலுக்கல் குலுக்கல் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

மேலும் கடிதம் வாசிக்கிறேன் என ஆபாசமாக பேசுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதும் என தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனால் இவர் மீது புகார் பறந்தது.

இதனால் திருச்சி போலீஸார் இவரை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள திருச்சி சாதனா இது போல வீடியோக்களை இனி வெளியிட மாட்டேன். இது போல என்  வீடியோக்களை வைத்திருந்தால் யாரும் இனி பதிவேற்ற வேண்டாம். ஏற்கனவே போட்டு இருக்கும் வீடியோக்களையும் டெலிட் செய்து விட்ருங்க என பரிதாபமாக கேட்டுள்ளார்.

பாருங்க:  கஞ்சா விற்போர் மீது குண்டர் சட்டம்- டிஜிபி அதிரடி உத்தரவு

More in Entertainment

To Top