பல வருடங்களாக பிரபல நெட் வொர்க்குகளான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் வேலிடிட்டியை ஒரு மாதத்துக்கு கொடுத்து வந்தன.
சரியாக இன்று ஒரு தேதியில் ரீசார்ஜ் செய்தால் அடுத்த 30 நாட்கள் கழித்துதான் அந்த வேலிடிட்டி முடிவடையும்.
ஆனால் சில வருடங்களாக வெறும் 28 நாட்கள் மட்டுமே மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
28 நாட்கள் வேலிடிட்டியை போல பில்டப் கொடுத்து வழங்கி வருவதுதான் கொடுமையான விசயம்.
இந்நிலையில் மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் இதை கண்டித்துள்ளது.
இனிமேல் 1 மாத வேலிடிட்டியை 30 நாட்களுக்கு வழங்க வேண்டும் என்று டிராய் கூறியுள்ளது.