கேபிள் டிவி புதிய கட்டண முறைக்கு அவகாசம் நீட்டிப்பு…

275
கேபிள் டிவி புதிய கட்டண முறைக்கு அவகாசம்

கேபிள் டிவியின் புதிய கட்டண முறையை அமுல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேபிள் டிவியில், பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பணம் செலுத்தும் புதிய கட்டண முறையை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மாற்றியமைக்க வேண்டும் என டிராய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதனால் ரூ.250 க்கு மேல் செலுத்த வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

எனவே, புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்ததை . இதை ஏற்ற டிராய் கேபிள் டிவியில் புதிய கட்டண முறையை அமுல்படுத்த வருகிற மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 100 பெண்கள் சிபிசிஐடியில் புகார்!