டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியீடு

டி.ராஜேந்தர் உடல் நிலை குறித்து சிம்பு அறிக்கை வெளியீடு

இயக்குனர் , நடிகர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவில் அஷ்டவாதானி என பெயரெடுத்தவர் டி,ராஜேந்தர். எதையும் உணர்ச்சி பெருக்குடன் பேசுவார் சிறந்த இலக்கியவாதி.

இவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இருதயத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல இருப்பதாக அவரது மகன் சிம்பு தெரிவித்துள்ளார்.

எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம், அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக அறிந்து அவரை வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் உள்ளார் என அவரது மகன் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.