தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் டாப்ஸி. தற்போது இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். சமீபகாலமாக ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அதிகமாக எழுதி வருகிறது.
அது பற்றியே வட இந்திய பத்திரிக்கைகளில் அதிகம் எழுதி வருவதால் அது ஓவர் டோஸ் ஆகி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில் சுஷாந்த் மரணம் குறித்து வாரிசுகளின் கட்டுப்பாட்டில் ஹிந்தி சினிமா இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பத்திரிக்கையாளர்களுக்கு இது போல செய்திகள் அல்வா சாப்பிடுவது மாதிரியல்லவா இது பற்றியே தொடர்ந்து எழுதி கொண்டிருந்தது. தொடர் சுஷாந்த் செய்திகளை மக்களே விரும்பவில்லை.இந்நிலையில்
வரும் 15ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தியேட்டர்களை திறந்துகொள்ளலாம். 50 சதவிகிதம் பார்வையாளர்களை மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தியேட்டர்கள் என்னென்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது.
இதுபற்றி டாப்ஸி சமூக வலைத்தள பதிவில், ‘நாடு முழுக்க 50 சதவிகித இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறப்பதற்கு அனுமதி கிடைத்து இருப்பதால், இனி சில ஊடகங்கள் 50 சதவிகிதம் நிஜமான செய்திகள் கொடுப்பதில் கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். இதுவரையிலும் தேவைக்கு அதிகமான பொழுதுபோக்கு செய்திகள் கொடுத்ததற்கு நன்றி. இனி நடப்பதை நாங்கள் கவனிக்கிறோம்’ என்று, மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார்.